truetamilnews

அரியர் மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்ய ஏஐசிடிஇ எதிர்ப்பு தெரிவித்து மின்னஞ்சல் வெளியிட்டதாக வெளியான தகவல் குறித்து தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக தமிழகத்தில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வைத் தவிர்த்து, பிற தேர்வுகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. மேலும், அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்து, தேர்வு எழுத காத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதனை அடுத்து, தமிழக மாணவர்கள் பலர் மிகவும் உற்சாகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து பல மாணவர்கள் வீடியோ வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில், பி.இ படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்ததை ஏற்க ஏஐசிடிஇ என்னும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது. அதனை அடுத்து, AICTE கருத்து தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அளித்த விளக்கத்தில், AICTE மின்னஞ்சல் விவகாரம் அரசின் கவனத்து கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில், தற்போது இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், “அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பு செல்லும். சூரப்பாவின் கருத்தை ஏஐசிடிஇ-ன் கருத்தாக திணிக்கப்பார்ப்பது கண்டிக்கத்தக்கது. பொறியியல் படிப்புகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களை ஆல் பாஸ் செய்தற்கு ஏஐசிடிஇ எதிர்ப்பு என்று வெளியான தகவல் தவறானது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks