truetamilnews.com

பிரபாஸ் நடிப்பில் உருவாக இருக்கும் ADIPURUSH படம் தெலுங்கு – இந்தியில் படமாக்கப்பட உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது.’


பிரபாஸ் நடிப்பில் உருவாக இருக்கும் ADIPURUSH படத்தில் வில்லனாக நடிக்க சயிஃப் அலி கான் ஒப்பந்தமாகி உள்ளார்.

பிரபாஸ் 22 படம் குறித்த அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது. பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கும் இந்தப் படத்திற்கு ADIPURUSH  என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவான தன்ஹாஜி (Tanhaji) படத்தை இயக்கியவர் தான் ஓம் ராவத். 

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அனுமன், ராமர், ராவணன் உள்ளிட்ட கதாப்பத்திரங்கள் காணப்படுவதால் இந்த படம் ராமாயனத்தின் ஒரு பதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை அப்படத்தின் இயக்குநர் சில தினங்களுக்கு முன் உறுதிபடுத்தினார். 

ராமர் கதாப்பாத்திரத்திற்கு சரியான ஆள் என்றால் அது பிரபாஸ் தான். பிரபாஸ் ஒரு வில்லாளரின் உடலமைப்பை அடைய வேண்டும் என்பதற்காக தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார் என்று ஓம் ராவத் முன்னர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது படத்தில் வில்லனாக நடிக்க சயிஃப் அலி கான் ஒப்பந்தமாகி உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ராமர் கதாப்பாத்திரத்தில் பிரபாஸ் நடிக்க, ராவணன் கதாப்பாத்திரத்தில் சயிஃப் அலி கான் நடிப்பது உறுதியாகியுள்ளது. 

மிகப்பெரிய பொருட்செலவில் பூஷன் குமாரின் டி-சிரீஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் தெலுங்கு – இந்தியில் படமாக்கப்பட உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது.

பிரபாஸ் மற்றும் சயிஃப் அலி கான் இருவரையும் ஒரே திரையில் பார்ப்பது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks