கோவை  மாவட்டம், பொள்ளாச்சி உடுமலை சாலையில் தென்னைநார் ஏற்றி வந்த லாரியில் கயிறு இறங்கியதால் கட்டுகள் ரோட்டில் உருண்டது.

பொள்ளாச்சி பகுதியில் அதிக அளவில் தென்னை மரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.  இதன் காரணமாகவே பொள்ளாச்சியில் தென்னை சார்ந்த தொழிற்சாலைகள் ஐந்நூறுக்கும் மேல் இயங்கி வருகிறது.  ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் ஒவ்வொரு வகையான பொருள்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுகிறது.

இன்று காலையில் பொள்ளாச்சி வஞ்சியாபுரம் பிரிவில் இருந்து தென்னைநார் ஏற்றிக் கொண்டு பல்லடம் சாலையில் உள்ள புளியம்பட்டி நோக்கி செல்லும் போது தென்னைநாரை கட்டிவைக்கப்பட்டு இருந்த கயிறு இறங்கியதால் கட்டுகள் ரோட்டில் உருண்டன.

வாகனங்கள் அந்த நேரத்தில் செல்லாத்தால் விபத்து ஒன்றும் ஏற்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks