truetamilnews.com

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய கூடுதலாக ஆயிரம் டிக்கெட்டுகளை வினியோகம் செய்ய தேவஸ்தான அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கான தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து. தொடர்ந்து, கடந்த ஜூன் 11ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது, ரூ.300 டிக்கெட் மூலம் தினந்தோறும் 9 ஆயிரம் டிக்கெட்களும், திருப்பதியில் வழங்கப்படும் (இலவச) தரிசன டிக்கெட்டுகள் ஒரு நாளைக்கு 3 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டில் ஒரு மணி நேரத்தில் 100 என ஒரு நாளைக்கு கூடுதலாக ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டு நேற்று கோட்டா வெளியீடு செய்யப்பட்டுள்ளது.இதன்மூலமாக தினந்தோறும் ரூ.300 சிறப்பு தரிசனத்தில் 10,000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் விதமாகவும், இலவச தரிசனத்தில் 3000 பக்தர்கள் தரிசனம் செய்யும் விதமாக தேவஸ்தான அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.


* அருங்காட்சியகம் அருகே சிறுத்தைதிருப்பதி ஏழுமலையான் கோயில் பின்புறம் வெங்கடேஸ்வரா அருங்காட்சியகம் உள்ளது. இதன் சுற்றுச்சுவர் அருகே நேற்று முன்தினம் இரவு சிறுத்தை ஒன்று வந்து அமர்ந்தது. சிறிது நேரத்தில் சத்தம் கேட்டதும் வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது. இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் லட்டு பிரசாதம் பெற்றுக்கொண்டு அருங்காட்சியகம் வழியாக தங்கள் அறைக்கு செல்வது வழக்கம். இதனால், எப்பொழுதும் பக்தர்கள் நடமாட்டம் இப்பகுதியில் மிகுந்து காணப்படும். இந்த இடத்துக்கு சிறுத்தை வந்ததால், பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks