சர்வதேசப் போட்டிகளிலிருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்துள்ள நிலையில் அவருடைய கடைசி போட்டியில் ரன்அவுட்டான உருக்கமான நிகழ்வு நம் நெஞ்சில் நினைவைத் தூண்டுகிறது.

இந்திய ரசிகர்களின் ஒட்டுமொத்த உலகக் கோப்பை கனவும் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டி கலைத்துவிட்டது. லீக் போட்டிகளில் ராஜநடை போட்டு வந்த இந்திய அணி அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் சரணடைந்தது.

MS Dhoni: முதல்போட்டியும் கடைசிப் போட்டியும் ரன்அவுட் -இந்திய ரசிகர்களை கண்கலங்க வைத்த 'தோனியின் கண்ணீர்'

மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்று வந்தது. அந்த வரலாற்றை இந்திய அணி மாற்றி அமைக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் ஆரம்பமே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

தொடக்க வீரர்கள் 3 பேரும் 1 ரன்னில் அவுட்டாகி வெளியேற மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகியதால் இந்திய அணி தடுமாறியது. சரிவிலிருந்த இந்திய அணியை தோனி – ஜடேஜா ஜோடி மீட்டனர். ஆட்டம் இந்தியாவின் கைக்கு வர, தோனி இருக்கும் தைரியத்தில் ஜடேஜா நம்பிக்கையுடன் அதிரடியாக விளையாடினார்.

Image

பரபரப்பான போட்டியின் இறுதியில் ஜடேஜா அவுட்டாக தோனி அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக தோனி ரன்அவுட்டானதை யாராலும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இந்திய அணியின் முழு சுமையையும் தோளில் சுமந்த தோனி அவுட்டானதை எண்ணி கண்கலங்கினார்.

தோனி கண்கலங்கும்இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அவரது ரசிகர்கள் பலர் அவருக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Image

தோனியின் அன்றைய போட்டிதான் அவருடைய சர்வதச கடைசிப் போட்டி என்று யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. அவருடைய முதல் ஒருநாள் போட்டியில் ரன்ஆவுட் ஆயிருந்த நிலையில், கடைசிப் போட்டியிலும் ரன்அவுட்டாகவே முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks