மக்களின் சக்தியையே வெற்றி என தேமுதிக கருதுவதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்,

சென்னையில் உள்ள பட்டாபிராமில்,ஆவடி சட்டப்பேரவை தொகுதியில் தேமுதிக பூத் முகவர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டணி நடைபெற்றதில் தேமுதிக கட்சியின் பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று அதில் ஒரு கட்சியை எப்படி வளர்க்க வேண்டும்

மற்றும் அதனை எப்படி ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்பது நன்கு தெரியும் என கூறியுள்ளார்.

ஊழல் இல்லாமல் உழைக்கும் ஒரே கட்சி தேமுதிக கட்சி மட்டுமே.234 தொகுதிகளிலும் 10 சதவீதம் வாக்குகளை பெற்று இக்கட்சி தனது தனித்தன்மையை வெளிப்படுத்தியது.

அந்தக் காலத்தில் வால் வைத்து போரிட்டனர் தற்போது வேல் வைத்து போர் புரிகின்றனர் ஆனால் தேமுதிக மட்டும் மக்களின் சக்தி யையே வெற்றி என கருதுகிறது.

தேமுதிக எந்த அணியோடு கூட்டணி வைத்து கொள்கிறதோ அந்த கூட்டணியே வெற்றி பெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

ஆண்ட கட்சிக்கும் இப்போது ஆண்டு கொண்டிருக்கும் கட்சிக்கும் சரிசமமாக தேமுதிக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

அதோடு மக்களுக்காக எப்போதும் உழைக்கும் கட்சி தேமுதிக என பிரேமலதா அவர்கள் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks