truetamilnews.com


பொள்ளாச்சியில் தென்னந்தோப்புகளில் வளர்ந்துள்ள களைச் செடிகளை அகற்ற இரசாய பொருட்களை பயன்படுத்தக்கூடாது என விவசாயிகளுக்கு இயற்கை விவசாயிகள் அறிவுறுத்திருக்கின்றனர்.

 
இரசாய பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதால் மண் வளம் பாதிக்கப்படும் என்று இயற்கை விவசாயிகள் கூறியுள்ளனர். 

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. இதில் பிரச்சினை என்னவென்றால் களைச் செடிகள் தான்.  மழைக் காலங்களில் இந்த களைச் செடிகள் வளர்வது மட்டுமில்லாமல்  தென்னைக்கு வைக்கப்படும் உரங்கள் மற்றும் பாசன நீரை இந்த களைச் செடிகள் எடுத்துக் கொண்டு செழிப்பாக வளர்ந்து புதர் போல் மாறிவிடுகிறது. இதனால் தேங்காய் உற்பத்தி குறைவதோடு தேங்காய் பறிப்பது, தோப்பை பராமரிப்பது போன்ற பணிகளில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே இதற்கு தீர்வாக விவசாயிகள் களைக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துகின்றனர்.  இதை பயன்படுத்திய பின்பு களைச் செடிகள் கருகிவிடுகின்றது. இதன் செலவும் குறைவு. ஆனால் ஒரு நிலத்தில் என்ன சத்து தேவையோ அந்த சத்தை அளிப்பதற்கு தான் களைச் செடிகள் வளரும். அந்த களைச்செடிகளை மக்க செய்து பயிர்களுக்கு உரமாக்கினால் பயிர்களுக்கு தேவையான சத்துகள் கிடைக்கும். ஆனால் களைக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் இந்த சத்துகள் கிடைக்காமல் போவதோடு மண்ணின் வளம் குறைகிறது. எனவே களைக் கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று தென்னை விவசாயிகளுக்கு இயற்கை விவசாயிகள் கூறியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks