கொரோனா தொற்றுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்பி வசந்த குமார் காலமானார். இது அரசியல் வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் உடல் நலம் சீராக இருப்பதாக சமீபத்தில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து இருந்தார். முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எம் பி வசந்தகுமாருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்து இருந்தார்.

Congress MP H Vasanthakumar dies of COVID-19 in Chennai

கன்னியாகுமரி தொகுதி எம்பியான வசந்தகுமாருக்கு வயது 70, இவரது மனைவி தமிழ்செல்விக்கும் கொரோனா ஏற்பட்டு இருந்தது. இருவரும் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது வசந்த குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks