truetamilnews.com

மும்பை: இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பது வளரிளம் பருவத்தினரிடையே எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து, ‘தசரா’ என்ற நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மார்ச் இறுதியில் இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பாதுகாப்பு கருதி கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. கடந்த, 5 மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பது வளரிளம் பருவத்தினரிடையே பெரியளவில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும், இடைநிற்றல் அதிகரிக்கும் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. தசரா நிறுவன ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதால் 28 சதவீத மாணவர்கள் மதிய உணவை இழந்து பசியுடன் இருக்கின்றனர். அவர்களுக்கான உணவுப் பொருட்கள் வீட்டில் சென்று விநியோகிக்கப்படவில்லை. 69 சதவீத மாணவர்கள் தங்கள் நட்பு வட்டத்தை இழந்துள்ளனர். தங்கள் பகுதிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக 51 சதவீத மாணவர்கள், 46 சதவீத மாணவிகள் கூறினர்.

ஆன்லைனில் புத்தங்கங்கள், குறிப்புகள் போன்றவை வழங்கப்பட்டிருந்தாலும் அவற்றை சுயமாக படிக்க வேண்டியுள்ளதாக 23 மாணவர்கள் மாணவர்கள், 28 சதவீத மாணவிகள் குறிப்பிட்டுள்ளனர். 10 முதல் 12 சதவீதம் பேர் மட்டுமே ஆன்லைன் வகுப்புகளுக்கான சாதனங்களை கொண்டிருக்கின்றனர். மேலும் 10 சதவீதம் பேர் மட்டுமே நிலையான இணைய இணைப்பு பெற்றுள்ளனர்.ஊரடங்கால் முக்கால்வாசி குடும்பத்தினர் வருவாய் இழந்துள்ளனர். அதனால் வீடுகளில் உள்ள சிறார்களை கூடுதல் வருமானத்துக்காக வேலைக்கு அனுப்பும் சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறு அந்த ஆய்வில் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks