சென்னை: கொரோனா அச்சம் காரணமாக, ஓணம் பண்டிகைக்காக அண்டை மாநில மலர்களை வாங்க வேண்டாம் கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் தமிழக மலர் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கேரளாவில் ஓணம் பண்டிகை 10 நாட்களுக்கும் மேலாக விமரிசையாகக் கொண்டாடப்படும். தினமும் தங்கள் வாசலில் மலர்களால் கோலமிட்டு, கேரள மக்கள் ஓணத்தை கொண்டாடி மகிழ்வார்கள். இதற்காக தமிழகத்திலிருந்து மலர்கள் விற்பனைக்காக அனுப்பப்படும். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியிலிருந்து மட்டும் டன் கணக்கான மலர்கள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்வார்கள். இதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர்களிலும் மலர் சாகுபடி நடந்து வருகிறது.


இந்நிலையில், கேரள அரசின் முடிவால் தமிழக மலர் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இதனால் சுமார் 25 கோடி மதிப்பில் நஷ்டம் ஏற்படலாம் என்றும் கணித்துள்ளனர். ஏற்கனவே, கொரோனா ஊரடங்கு காரணமாக வியாபாரமின்றி தவிக்கும் எங்களுக்கு இது பெரிய அதிர்ச்சியாக உள்ளது. எனவே, கேரளா அரசு இந்த தடை உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக முதல்வர் இந்த பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண வேண்டுமென மலர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks