ஒருவேளை நீட் தேர்வில் ஃபெயிலாகி விடுவோமோ? எந்த மாதிரியான கேள்விகள் கேட்பார்களோ என்று பயந்து பயந்தே 19 வயசு மாணவி சுபஸ்ரீ தூக்கு போட்டு தொங்கிவிட்டார்.. இந்த தற்கொலையானது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளதுடன், நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மற்ற மாணவர்களுக்கும் மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. “நீட் தேர்வு என்னை போன்ற பல ஏழை மாணவர்களின் கனவை கலைக்கும்” என்று ஊடகங்கள் முன்பு அன்று கதறினார் அனிதா.. உயிரையும் மாய்த்து கொண்டார்.. அதற்கு பிறகும் நீட் விரட்டி கொண்டே வருகிறது.. நிறைய அனிதாக்கள் நம்மை விட்டு சென்று கொண்டே இருக்கிறார்கள்.

இப்போதும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. கோவை ஆர்எஸ்புரம் வெங்கடசாமி ரோட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்… இவர் ஒரு அரசு ஊழியர்.

சுபஸ்ரீ

இவரது மகள் சுபஸ்ரீ.. 19 வயதாகிறது.. இவர் கடந்த வருடமே நீட் தேர்வு எழுதியிருக்கிறார்.. ஆனால் தேர்ச்சி பெறாமல் இருந்துள்ளார். அதனால், இந்த வருஷமாவது எப்படியும் பாஸ் பண்ணிட வேண்டும் என்று தன்னை முழு நேரமும் தயார் படுத்தி வந்தார்.. இதற்காகவே ஒரு அகாடெமியில் சேர்ந்தார். 2 வருஷமாக அங்குதான் படித்து வந்தார்.

இந்த மே மாதம் நீட் தேர்வு நடக்க இருந்தது.. ஆனால், லாக்டவுன் என்பதால், செப்டம்பர் மாதத்திற்கு மாற்றி வைத்துள்ளனர்.. இது சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தாலும், நீட் தேர்வுக்கு விலக்கில்லை என்று உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது… அதனால் எப்படியும் செப்டம்பர் தேர்வு நடக்க இருக்கிறது.

இந்த தேர்வுக்குதான் சுபஸ்ரீ விழுந்து விழுந்து படித்து வந்துள்ளார்.. ஆனால், தேர்வில் எப்படிப்பட்ட கேள்விகள் கேட்பார்கள் என்று நினைத்து பயந்து இருக்கிறார்.. நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவோமா? மாட்டோமோ என அவர் மன குழப்பத்தில் இருந்துள்ளார். இதனால் ஏற்பட்ட பயம் காரணமாக மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

இதுவே அவருக்கு மன உளைச்சலாகவும் மாறி உள்ளது.. அந்த அச்சம் காரணமாக, வீட்டில் யாருமில்லாத போது, சுபஸ்ரீ தூக்கு போட்டு கொண்டார்..இதை பார்த்து பெற்றோர் கதறி துடித்து அழுதனர்.. தகவலறிந்து போலீசாரும் விரைந்து வந்தனர்.. சுபஸ்ரீயின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நீட் தேர்வு கட்டாயம் வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.. அதேசமயம், இந்த நீட் தேர்வு வேண்டாம் என்று பல தரப்பில் இருந்தும் குரல்கள் எழுந்தபடியே இருந்தாலும், ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் வகையில் உள்ளது என்ற காரணங்களை எடுத்து வைத்தாலும் இதுபோன்ற அநியாய மரணங்களுக்கு ஒரு முடிவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.. இன்னும் எத்தனை அனிதாக்களை இழக்க போகிறோம் என்று தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks