காலங்களில் மண் பானை தயாரிப்பதிலும் விற்பனை செய்வதிலும் சிரமம் ஏற்படுவதால் நிவாரணம் கேட்டு மண்பாண்டத் தொழில் செய்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் பெரும்பதி, புரவிபாளையம், நல்லிக்கவுண்டன்பாளையம், நெகமம் அடுத்த ஆலப்பம்பட்டி போன்ற பகுதிகளில் மண்பாண்டங்கள்  தயாரிக்கப்பட்டு வருகிறது.

  ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் மண்பாண்டங்கள் செய்யத் தேவையான களிமண் கிடைப்பதில்லை.

தயாரித்த மண்பாண்டங்களை கொள்முதல் செய்ய மொத்த வியாபாரிகள் வருவதில்லை.   

ஆவலப்பம்பட்டியில் மண்பாண்ட தொழில் செய்து வரும் நடராஜ் இது குறித்து கூறுகையில் ” ஆண்டுதோறும் மழை துவங்குவதற்கு முன்பாக கோதவாடி குளத்தில் களிமண் எடுப்பதற்கு வருவாய்த் துறையினரால் அனுமதி வழங்கப்படும். நடப்பாண்டில் மண் கிடைக்கவில்லை. அவசரத் தேவைக்கு விவசாய நிலங்களில் மண் எடுக்கப்பட்டது.மழை காலங்களில் மண்பாண்ட தொழில் தடைபடும். இதனால் நிவாரணத் தொகை தனகேட்டு பலமுறை விண்ணப்பித்தும் நிவாரணம் கிடைக்கவில்லை எனவும், இது குறித்து முறையான வழிகாட்டுதல் இல்லாததால் வறுமையில் தவிப்பதாகவும் கிராம நிர்வாக அலுவலகம் மூலம் மண்பாண்ட தொழிலாளர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் ” என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks