ஓட்டம்பொள்ளாச்சியில் அதிக அளவு இரயில்களை விடவும் வேகத்தை அதிகரிக்கவும் தெற்கு இரயில்வே திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து தண்டவாளத்தின் உறுதித் தன்மையை பரிசோதித்து பாதுகாப்பை மேம்படுத்துவதில் இரயில்வே துறை தீவிரம் காட்டி வருகின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களாக குறிப்பிட்ட வழித்தடங்களில் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாலக்காடு-மேட்டுப்பாளையம் இடையே பொள்ளாச்சி வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

பாலக்காட்டில் மதியம் 2.00 மணிக்கு புறப்பட்ட இரயில் மதியம் 3.30 மணிக்கு பொள்ளாச்சி வந்தது. மாலை 4.00 மணிக்கு பொள்ளாச்சியிலிருந்து புறப்பட்ட இரயில் மாலை 6.00 மணிக்கு மேட்டுப்பாளையத்தைஅடைந்தது.  இதில் பொள்ளாச்சி பாலக்காடு இடையே தண்டவாள அதிர்வுகள் பதிவு செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks