ஏல்க்காய் கலந்த பால் குடிப்பதால் செரிமானம் மேம்படும். கால்சியத்தின் முக்கியத்துவத்தை அறிந்தவர்களுக்கு பால் தினசரி உணவோடு ஒன்றாக இணைந்து இருக்கும். அப்படி நீங்கள் தினமும் பால் குடிக்கிறீர்கள் எனில் அதோடு ஏலக்காய் தட்டிப்போட்டு குடியுங்கள்.  இதனால் கூடுதலான நன்மைகளை பெறலாம் எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் அருந்தும் பாலில் தினம் 2 ...

பொதுவாக பாலில் உள்ள கால்சியம் உடலின் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது.  மேலும் தசைகளையும் பலப்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில் ஏலக்காயையும் சேர்ப்பதால் பாலில் உள்ள கால்சியத்தின் அளவு மற்றும் அதன் நன்மைகளை இரட்டிப்பாக்கும். எனவே ஏலக்காய் பால் குடிப்பது நல்லது.

நீங்கள் அருந்தும் பாலில் தினம் 2 ...

செரிமான வலிமை

ஏலக்காய் கலந்த பாலை குடிப்பதால் செரிமானம் மேம்படும்.  ஃபைபர் ஊட்டச்சத்து நமது செரிமானத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே செரிமான அமைப்பை மேம்படுத்த ஏலக்காய் பால் குடிப்பது நல்லது.  இது பல வகையான செரிமான நோய்களையும் நீக்குகிறது. அது ஏலக்காய் கலந்த பாலில் தாராளமாக உள்ளது.

வாய் புண்களுக்கு சிறந்தது

ஏலக்காய் வாய் மற்றும் வயிற்றுப் புண்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.  எனவே பால் மற்றும் ஏலக்காயை ஒன்றாகக் குடிப்பதால் வாய் புண்களைப் போக்க உதவுகிறது.

இரத்த அழுத்த கட்டுப்பாடு

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு எந்த நேரத்திலும் இதய நோய்க்கான ஆபத்து இருக்கலாம். இதை தவிர்க்க பாலில் ஏலக்காய் கலந்து குடிப்பது நல்லது. பால் மற்றும் ஏலக்காய் இரண்டிலும் ஏராளமான  மெக்னீசியம் உள்ளது.  இந்த ஊட்டச்சத்து உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும், இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்கவும் திறம்பட செயல்படுகிறது. எனவே தினமும் அருந்தும் பாலில் ஏலக்காயை தட்டிப்போட்டு நன்கு கொதிக்க வைத்து ஒரு கிளாஸ் குடியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks