truetamilnews.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் ஒருவராக வைல்டு கார்டு எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி உள்ளே நுழைந்தார். அதன் பின்னர், குறைவான வாக்குகள் வித்தியாசத்தில், கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

அதன் பின்னர், நடிகை கஸ்தூரி, பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்து வந்திருந்தார். இதனிடையே தனக்கு பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டதற்கான சம்பளம் இன்னும் தரவில்லை என கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு வருடம் நிறைவு பெற்ற நிலையில் இன்னமும் தனக்கான சம்பளம் தரவில்லை” என அந்த பதிவில் குற்றச்சாட்டியுள்ளார்.

இதை கண்ட ட்விட்டர் நெட்டிசன்கள் கஸ்தூரிக்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர். இன்னும் சிலரோ, ‘ஓராண்டு கழித்து இப்படி ஒரு புகாரை கூறுவது ஏன்? இதுவும் வீண் விளம்பரத்திற்காகவா’ என எதிர்மறை விமர்சனங்களை முன்வைத்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தாண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி தள்ளிப்போன நிலையில், வரும் 4 ஆம் தேதி முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பமாகிறது. மூன்று பிக் பாஸ் சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல் ஹாசனே வழக்கம் போல இந்த நான்காவது சீசனையும் அவரே தொகுத்து வழங்குகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks