truetamilnews.com

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக நேற்று தமிழக அரசு அறிவித்தது. இந்த ஊடங்கு உத்தரவு அக்டோபர் 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணிவரை அமலில் இருக்கும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு நீட்டிப்பு. பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூட தடை தொடரும், வாரச்சந்தைகள் மட்டும் உரிய வழிகாட்டு நெறிகளை பின்பற்றி இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து , தமிழகம் முழுவதும் கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்ட உழவா் சந்தைகள் நாளை (அக்டோபர் .1) முதல் திறக்கப்படுகிறது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கிலும் தமிழக அரசு பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் கூடிய அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து, கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்ட உழவா் சந்தைகள் செயல்படவும், விவசாயிகளின் விளைபொருள்கள் நுகா்வோருக்கு நேரடியாக உரிய விலையில் கிடைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்த உழவா் சந்தைகள் வியாழக்கிழமை (அக்டோபர் .1) முதல் மீண்டும் செயல்படும்.

நுகா்வோா்கள், விவசாயிகள், வியாபாரிகள் கரோனா தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.6 மாத ஊரடங்குக்கு பிறகு நாளை முதல் வாரச்சந்தைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் ஊரடங்கு காலத்தில் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை அதிக விலை கொடுத்து வாங்கி பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். நாளை முதல் வாரச்சந்தைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால் அங்கு காய்கறி உள்ளிட்ட பொருட்கள் விலை குறைவாக கிடைக்கும் என்பதால் பொது மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks