truetamilnews.com

நாம் பொதுவாக பழங்களை மட்டும் சாப்பிட்டு விட்டு தோல்களை வீசி விடுவோம்.   அப்படி வீசப்படும் தோல்களில் எவ்வளவு பயன்கள் இருக்கும் என்று தெரியுமா
நாம் சாப்பிடும் பழங்களில் சில பழங்களின் தோல்களில் உள்ள சத்துக்களை இந்த செய்தி குறிப்பின் மூலம் அறியலாம்

ஆரஞ்சு பழத் தோல்

ஆரஞ்சு பழத்தோல் உடல் எடையை குறைக்கும். நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்களை குணப்படுத்தும். புற்று நோயை தடுக்கும். இதயத்தை பலப்படுத்தும் ஆரஞ்சு பழத்தோலில் புளிக்குளம்பு செய்து சாப்பிட்டால் சுவையும் சத்துக்களும் அபாரமாய் இருக்கும்

வாழைப்பழத் தோல்

வாழைப்பழத் தோலை பற்களில் தினமும் தேய்த்து வந்தால் மஞ்சள் பற்கள் வெள்ளையாகும். காயங்கள் மீது தடவினால் புண் மிக விரைவில் ஆறும். பாத வெடிப்புகளில் தினமும் இந்த தோலை தேய்த்து வந்தால் ஒரு வாரத்தில் வெடிப்புகள் மறையும்

மாதுளைத் தோல்

மாதுளம் பழத் தோல் சிறிது அளவு உவர்ப்பு சுவையுடன் இருக்கும். இது இதய நோய்கள் வராமல் தடுக்கும். வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த வெறும் வயிற்றில் அதனை மென்று சாப்பிடலாம். 

வெள்ளரிக்காய் தோல்

வெள்ளரிக்காய் தோலில் நிறைய ஆண்டி ஆக்ஸிடெண்ட் இருக்கிறது. நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. உடல் எடையை குறைக்கும். மலச்சிக்கலை குணப்படுத்தும்.  கண் பார்வையை அதிகரிக்க செய்யும்

ஆப்பிள் தோல் 

ஆப்பிள் தோலில் ஃபிளேவினாய்டு உள்ளது. இது புற்று நோயை எதிர்க்கும் தன்மை கொண்டது. நோய் எதிர்ப்பு செல்களை வலுப்படுத்தும். இதிலுள்ள அர்சோலிக் அமிலம் உடல் பருமனை குறைக்கும்

எலுமிச்சைத் தோல்

 எலுமிச்சையின் தோல் பற்களில் உண்டாகும் நோய்களை குணப்படுத்தும். இதிலுள்ள லெமனோன்  மற்றும் சல்வெட்ரால் இரண்டுமே புற்று நோயை விரட்டும். உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks