இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் ‘இந்தியாவுக்காக 2021 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட தோனியிடம் பிரதமர் மோடி கோரிக்கை வைக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

அண்மையில் யூட்யூப் சேனல் நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த அக்தர் ‘தோனி 2021 டி20 உலகக் கோப்பை தொடர் வரை விளையாடியிருக்கலாம் என நினைக்கிறேன். அவருக்கு ரசிகர்களிடம் உள்ள ஆதரவும், அன்பும், அங்கீகாரமும் தான் நான் இதை சொல்ல காரணம். இருந்தாலும் ஓய்வு அவரது தனிப்பட்ட முடிவு.

சிறிய நகரான ராஞ்சியிலிருந்து கிளம்பிய அவர் இந்தியாவையே தன் ஆட்டத்தின் மூலமாக கவர்ந்திழுத்தவர். கிரிக்கெட் காலத்தில் அவர் விளையாடவில்லை என்றாலும் அவரை எப்போதுமே யாராலும் மறக்க முடியாது.

ஒரு வேளை இந்திய பிரதமர் மோடி தோனியிடம் 2021 டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட கோரிக்கை விடுத்தால் அதை தோனியால் முடியாது என சொல்லி மறுத்துவிட முடியாது. இது மாதிரியான நிகழ்வுகள் பாகிஸ்தானில் நடந்துள்ளன. மேலும் அவருக்கு விருப்பம் இருந்தால் இந்தியாவில் அவருக்கென ஃபேர்வெல் மேட்சும் நடத்தப்படலாம்’ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks