பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு உட்பட்ட ஆழியாறு, டாப்சிலிப், காடம்பாறை, சர்க்கார்பதி போன்ற வனப்பகுதிகளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசித்து வருகின்றனர்


மலைக் குன்றுகளிலும் மேடுகளிலும், மூங்கில் குச்சிகளை வைத்து களிமண்ணால் பூசப்பட்ட வீடுகளில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் அவரவர் இருக்கும் இடங்களில் விவசாயத்தோட்டம் அமைத்து அதில் கிடைக்கும் சிறு வருமானங்களை கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.


காலம் காலமாக இங்கு வசித்து வரும் இவர்களுக்கு தமிழக அரசு சார்பாக எந்த ஒரு அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என்பதே இவர்களின் குற்றச்சாட்டு
 தரமான வீடு, சாலை வசதி, மின்சாரம் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு கூறுகின்றர்
பள்ளி, அவசரத்தேவை மற்றும் மருத்துவமனைக்கு கூட பல மைல்கள் நடந்து தான் செல்ல வேண்டியுள்ளது எனவும் கூறியுள்ளனர்.

 மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களை காக்க  2009ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இருந்தும் 11 வருடமாக தமிழக அரசும் அதை சார்ந்த வனத் துறையும் அந்த சட்டத்தை அமல்படுத்தாமல் உள்ளனர்

 காலம் காலமாக வசித்து வரும் பழங்குடியின மக்களை காட்டை விட்டு வெளியேற வைப்பதே வனத்துறையினரின் நோக்கமாக இருப்பதால் வன உரிமை சட்டம் 2009ஐ அமல்படுத்தி பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி அவர்களின் வாழ்க்கையை காக்கவும் தமிழக அரசுக்கு பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks