truetamilnews.com

சிறு, குறு கடன் வழங்கிய தனியார் நிறுவனங்கள் மகளிர் சுயஉதவிக் குழு பெண்களை மிரட்டியும், நெருக்கடி குடுத்தும் கட்டாய வசூல் செய்வதிலிருந்து கால அவகாசம் வழங்கிடக் கேட்டு தெருவில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்..

செப்-25 வெள்ளி காலை 9 மணிக்கு தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் கிராம சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள இக்யூ டாஸ், சூர்யா. போன்ற இன்னும் சில தனியார் நிறுவனங்கள் பல ஆண்டுகளாக அனைத்து பகுதியில் உள்ள பெண்களுக்கும் மகளிர் சுயஉதவிக் குழு உதவி என்ற பெயரில் 10 ஆயிரம் முதல் 30, 50 ஆயிரம் 1 லட்சம் என தன்மைக்கு ஏற்ப சிறு குறு கடன்களை வங்கிகள் அல்லாத பைனான்ஸ் நிதி நிறுவனங்களும், தனியார் வங்கிகளும், கூட்டுறவு கடன் வங்கிகள், அரசு வங்கிகளுக்கு நிகராக போட்டிபோட்டுக் கொண்டு மகளிருக்கு கடன்கள் வழங்கிவந்தன.

இதில் உள்ள பெண்கள் வாரமாகவும், மாதமாகவும் குழுவுக்கு தலைமை மூலம் அந்தந்த நிறுவனங்களுக்கு செலுத்தி வந்தனர். பல முறை முழுவதுமான கடன்களை அடைத்த பின்னர் மீண்டும் மீண்டும் கடன் பெற்று முறையாக செலுத்தி வந்துள்ளனர்.

ஆனால் CoviD – 19 பெருந்தொற்றின் காரணமாக ஏற்ப்பட்ட ஊரடங்கு மற்றும் தொழில் நெருக்கடியினால் ஏற்பட்டவருமான இழப்பு காரணமாகவும், உரிய நிவாரணம் வழங்கப் படாததாலும் தற்போதுவரை பீடி தொழில் போன்ற உற்பத்தி சார்ந்த தொழிற் சாலைகளில் முழுவதுமாக தொழில் நடக்காத சூழ்நிலையில் வாழ்க்கை நடத்துவதற்கே பெரும் சிரமமான சூழலில் கடன் நிறுவனங்கள் தயவு தாட்சன்யம் இன்றி, ஈவு இரக்கமின்றி ஆட்களை அனுப்பி வீட்டில் இருக்கும் பெண்களிடம் தெருவில் நின்று சத்தம் போடுவதும் கதவை தொடர்ந்து தட்டி தொந்தரவு செய்வதும், அடுத்த முறை கட்டுகிறேன் என்று சொல்லும் தாய்மார்களிடம் நீங்கள் தினமும் மூன்று வேளை சாப்பிடுகிறீர்களே அதை நீங்கள் நிறுத்தவில்லையே, சோறு தானே சாப்பிடுகிறீர்கள் என்று கேவலமாகப் பேசியும், என்ன செய்வீர்களோ எங்களுக்குத் தெரியாது பணம் கட்டினால் மட்டுமே நாங்கள் இந்த இடத்தைவிட்டு நகருவோம் என்று கூறி, வீட்டை சுற்றி சுற்றி திரும்ப திரும்ப வருவதும் போவதுமாக உள்ளனர்…

மேலும், இனி நீங்கள் எங்கேயும் கடன்பெற இயலாத வண்ணம் ஆதார் கார்டு, பேன் கார்டுகளில் Cbil Scoreகளை குறைத்து விடுவதாகவும் கூறி மிரட்டுகின்றனர்.

இதனால் பல குடும்பங்களில் கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டு வருகிறது.

ஒரு கொடூரமான சம்பவமாக, மாரடைப்பால் தனது கணவர் இறந்த அன்று கூட அவரது மனைவி குழு கடனை கட்டிவிட்டு வந்தே தனது துக்கத்தை தொடர்ந்த அவலநிலையும் நடந்தேறியுள்ளது.

இதனால் கடன் பெற்ற பெண்கள் கடன் நிறுவன ஊழியர்கள் மிரட்டலுக்கு பயந்து ஓடி ஒழியும் அவமானகர சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இதனால் பெண்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும் அரசு மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு கடன்களை செலுத்த 6 மாத காலம் காலநீட்டிப்பு வழங்கிடவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திடவும் குத்துக்கோவில் முன்பு தெருவில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

இதில் அரசு செவிமெடுக்காத பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அல்லது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டாக தஞ்சம் புகப் போவதாகவும் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks