திருநெல்வேலி என்றால் நினைவிற்கு வருவது இருட்டுக்கடை அல்வா. இதன் ருசிக்கு பலபேர் அடிமை. சரி இதில் உள்ள பயன்களை அறிந்து கொள்வோம்.


 இந்த அல்வா செய்வதற்கு தேவையான பொருள்கள் சம்பா கோதுமை, கருப்பட்டி, நெய், ஏலக்காய் தூள்இந்த பொருள்களின் பயன்கள் பின்வருமாறு.

சம்பா கோதுமை

 இதில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் உள்ளது.  நார்ச்சத்து, கால்சியம், ஒமேகா 3, ஒமேகா 6, கரையக்கூடிய கொழுப்புகள் மற்றும் புரதச்சத்துகள் உள்ளன.

கருப்பட்டி

 சர்க்கரையைவிட பல மடங்கு உடலுக்கு நன்மைகளை தருகிறது கருப்பட்டி. சித்த மருத்துவத்திலும் ஆயுர்வேத மருத்துவத்திலும் கருப்பட்டிக்கென்றே தனி இடம் உண்டு
இது ஜீரண பிரச்சினை, நுரையீரல் சார்ந்த கோளாறுகள் மற்றும் தொண்டை சளியை குணப்படுத்தும். இதிலும் புரதம், தாதுக்கள், பாஸ்பரஸ், கால்சியம், மாவுச்சத்து, இரும்புச் சத்து ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

 நெய்

அளவான நெய் உடலுக்கு நன்மையே.  இது குடல் புண்களை குணப்படுத்தி,  சரும அழகை பராமரித்து, இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும்.

ஏலக்காய்

 இது உணவுப் பொருட்களின் சுவையை மட்டும் கூட்டாமல் உடலின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.  பல் சார்ந்த  நாய்களுக்கும், செரிமானத்தை தூண்டவும், மலட்டுத்தன்மை குணமடையவும் உதவுகிறது.
 புரதம், நார்சத்துகள், வைட்டமின் சி, வைட்டமின் எ, சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துகள் இதிலும் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks