எஸ்.பி.பியின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது தனக்கு வாய்த்த பேறு என்று தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், யாரும் போன் செய்து தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார் எஸ்.பி.பி. அதன்பிறகு சில நாட்களில் அவர் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து ஐசியூ-வில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் எஸ்.பி.பியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், எஸ்,பி.பியின் உடல்நிலை மீண்டும் மிகவும் மோசமாக இருப்பதாக நேற்று இரவு அறிக்கை வெளியிட்டது மருத்துவமனை நிர்வாகம். இந்த நிலையில், இன்று பிற்பகல் 1.04 மணிக்கு பாடகர் எஸ்.பி.பி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 74. பாடகர் எஸ்.பி. உயிரிழந்தது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய எஸ்.பி.பி உயிரிழந்ததை அடுத்து, பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திரைத்துறையினர் பலர் மிகுந்த வருத்தத்துடன் சமூகவலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில், “அன்னைய்யா S.P.B அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks