truetamilnews.com

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் இன்று மதியம் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.

 தேர்தல்

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் இன்று மதியம் 12.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். செய்தியாளர் சந்திப்பில் பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதி குறித்து சுனில் அரோரா அறிவிக்கிறார். கொரோனா பேரிடர் காலத்தில் பீகார் சட்டபேரவை தேர்தல் நடத்துவது சவாலான காரியம். இதனால் பீகாரில் நேரில் சென்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆய்வு மேற்கொண்டார். இதை தொடர்ந்து அவர் இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார்.

sunil arora

அதேபோல் தமிழகத்தில் காலியாக உள்ள எம்பி, எம்எல்ஏ தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒரு நாடாளுமன்ற தொகுதி, 3 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks