இது குறித்து மத்திய விமான போக்குவரத்து துறையின் அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி கூறி இருப்பதாவது:சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏஏஐ, நாடு முழுவதும் 100 க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை சொந்தமாக நிர்வகித்து வருகிறது. நாளை நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் நாட்டில் உள்ள அமிர்தசரஸ், இந்தூர், ராஞ்சி, திருச்சி, புவனேஷ்வர், ராய்ப்பூர் உள்ளிட்ட ஆறு விமான நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து முடிவு செய்யப்படும்.

16 Updated Airports In India (with photos) That Every Traveler ...

அமைச்சரவை ஒப்புதலுக்கு பின்னர் விமான நிலையங்களை தனியார் மயமாக்குவதற்கான நடைமுறை இந்த ஆண்டே துவங்கும்.சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விமான நிலையங்களை “மேலும்” தனியார்மயமாக்குவதற்கான திட்டத்தை மத்திய அமைச்சரவை முன் வைக்கும் என கூறினார்.

Which is the largest airport in India? - Quora


மேலும் அகமதாபாத், மங்களூர், லக்னோ, குவஹாத்தி, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர் ஆகிய ஆறு விமான நிலையங்களை தனியார் மயமாக்குவது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்., மாதத்தில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் அகமதாபாத், மங்களூரு, மற்றும் லக்னோ ஆகிய மூன்று விமான நிலையங்களை தனியார் மயமாக்கல் திட்டத்தின் படி ஏஏஐ உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாகவும் மேலும் 3 விமான நிலையங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks