truetamilnews.com

பாலிவுட் நடிகைகளாக தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட 4 பேருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவி சம்மன் அனுப்பியுள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதில் சுஷாந்த்தின் காதலி ரியா சக்கரபூர்த்திக்கு போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதோடு அவர் சுஷாந்த்துக்கும் அதை வாங்கிக் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து ரியா, அவரது சகோதரர் சோவிக், சுஷாந்த்தின் வீட்டு மேலாளர் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு இந்த விஷயம் பூதாகரமாக வெடித்தது.

ரியா கொடுத்த தகவலின் அடிப்படையில் பாலிவுட் நடிகைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. போதைப் பொருளை பல சினிமா பிரபலங்கள் வாங்கி பயன்படுத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதில் பிரபல நடிகைகளான தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங்  பெயரும் அடிபட்டுள்ளது. ரகுல் ப்ரீத் சிங் தமிழில் தீரம் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

சம்மன் அனுப்பப்பட்ட நடிகைகள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். இந்த விவகாரம் இந்திய அளவில் விஸ்பவரூம் எடுத்துள்ளது. சமீபத்தில் ஸ்ரீரெட்டி தெலுங்கு திரையுலகில் கூட போதைப் பொருள் பழக்கம் அதிகமாக உள்ளதாகவும், யாரெல்லாம் அதனை பயன்படுத்துகிறார்கள் என்ற லிஸ்ட்டை வெளியிட தயாராக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks