சவுதாம்ப்டன் : இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையால் பெரும்பாலும் தடைபட்ட நிலையில் டிரா ஆனது. ஐந்து நாட்களும் போட்டி மழையால் தடைபட்டு டிரா ஆனது இந்தப் போட்டி . பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸில் 236 ரன்கள் எடுத்தது. ஐந்தாம் நாள் இறுதியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 110 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்து போட்டியை டிரா செய்தது

இரண்டாவது டெஸ்ட்

இரண்டாவது டெஸ்ட்

இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் அந்த அணி 45.4 ஓவர்கள் மட்டுமே ஆடியது. மழையால் பாதி நாள் ஆட்டம் தடைபட்டது.

மீண்டும் மழை

மீண்டும் மழை

இரண்டாம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 40.2 ஓவர்கள் ஆடிய நிலையில் மழையால் போட்டி மீண்டும் தடைபட்டது. அப்போது பாகிஸ்தான் 9 விக்கெட்களுடன் ஆடி வந்தது. மூன்றாம் நாள் ஆட்டம் முழுவதுமாக மழையால் கைவிடப்பட்டது.

England and Pakistan draw second Test, the tourists landing a ...

முதல் இன்னிங்க்ஸ்

நான்காம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 236 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்க்ஸ்-ஐ முடித்துக் கொண்டது. அடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸ் ஆடத் துவங்கியது. இங்கிலாந்து அணி 5 ஓவர்கள் ஆடி 7 ரன்கள் எடுத்து 1 விக்கெட் எடுத்த நிலையில் மீண்டும் மழை வந்தது.

டிரா

போட்டி டிரா

நான்காம் நாளில் வெறும் 10.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மீண்டும் மழை குறுகிட்டது, ஐந்தாம் நாளும் மழையால் தடைப்பட்டு 45 ஓவர்கள் வரை வீசலாம் என்ற நிலையில் மீண்டும் துவங்கியது. இங்கிலாந்து அணி 43.1 ஓவரில் 110 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. இரு அணிகளும் போட்டியை அத்துடன் டிரா செய்தன. இங்கிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவில் 1 – 0 என முன்னிலையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks