truetamilnews.com

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்ததால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டு உத்தரவிடப்பட்டது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து இருந்தாலும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி தேர்வுகள் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு தொடர்பான கேள்விகள் எழுந்தது. இந்தியாவின் பல மாநிலங்களில் மாணவர்கள் விருப்பப்பட்டால் 10 ஆம் வகுப்புக்கு மேல் பள்ளிகளுக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் முதலாம் வருடம் வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி திறக்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்துள்ளார்.

மேலும், முதலாம் வருட மாணவர் சேர்க்கையை வரும் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதிக்குள் முடித்துவிட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனைப்போன்று முதலாம் வருட மாணவர்களுக்கு பருவ தேர்வு மார்ச் மாதத்தில் நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks