truetamilnews.com

பெண்களின் சுயாதிகாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, பெண்களால் இயக்கப்படும் 13 வகையான சூரிய மற்றும் மின்சாரத்தால் இயங்கும் ஆட்டோக்களை தமிழக முதல்வர் கே பழனிசாமி திங்கள்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த திட்டம் தமிழகத்திற்கு முதலீட்டைப் பெறுவதற்கும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் முதலமைச்சர் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாகும் என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு தனது வெளிநாட்டு பயணத்தின்போது, ​​பழனிச்சாமி அவர்கள் துபாயில் எம் ஆட்டோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். சார்ஜிங் நிலையங்கள், உற்பத்தி அலகுகள் போன்றவற்றை வழங்குவதில் தனது அரசாங்கங்கம் ஆதரவளிக்கும் என்று அவர் கூறினார். செயல்பாட்டைத் தொடங்க உரிமம் பெற்ற முதல் நிறுவனம் எம் ஆட்டோ என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks