truetamilnews.com

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் அரும்பாக்கம் பகுதியில் உள்ள திருவீதி அம்மன் கோயில் தெருவில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது பெரும் சத்தத்துடன் பள்ளம் ஏற்பட்ட காரணத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் வாகனங்களோ அல்லது பொது மக்களோ கடந்து
செல்லாத காரணத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் பலத்தை மறு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதி வழியாக வந்த வாகனங்கள் வேறு பாதைக்கு மாற்றி அனுப்பப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks