பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் போதிய நீர் ஆதாரங்கள் இருப்பதால் விலங்குகள் நடமாட்டம் குறையும் என தகவல் தந்துள்ளனர் வனத்துறையினர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் பருவமழை பெய்து வருவதால் நீர் வரத்து அதிகரித்து விலங்குகளின் நீர் மற்றும் உணவுத்தேவைகள் பூர்த்தி அடைந்துள்ளதாக ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் ஆரோக்கியராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அதிக அளவில் யானைகள், மான்கள், புலிகள், சிறுத்தைகள், பறவைகள் உள்ளன. இங்கு தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால் ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பாக மழை நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஓடை, சிற்றோடை , தடுப்பணை, தொட்டிகள் போன்ற நீர் ஆதாரங்களில் நீர் நிரம்பியுள்ளது. இதனால் மரம், செடிகள் எல்லாம் பசுமையாக காணப்படுகிறது. இதானால் தற்போது விலங்குகளுக்கு தேவையான உணவுகள் போதிய அளவில் இருக்கிறது.

தற்போது வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் விலங்குகள் நடமாட்டம் குறைந்துள்ளது என வனத்துறையினர் தகவல் தந்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks