மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் கொடுத்து மக்களிடம் கவனம் பெற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது 3-வது படத்திலேயே விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியுள்ளார். ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போயுள்ளது. கொரோனா பிரச்னை முடிந்து இயல்புநிலை திரும்பிய பின்னர் ‘மாஸ்டர்’ திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தை அடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க இருப்பதாகவும், ரஜினிகாந்த் நடிக்கும் கடைசிப் படமாக இது இருக்கும் என்றும் தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் அதற்கு முன்பாக கமல்ஹாசனை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘எவனென்று நினைத்தாய்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படம் 2021-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவனென்று நினைத்தாய்’ டைட்டில் போஸ்டரில் சிவப்பு நிற பின்னணியில் துப்பாக்கிகளால் கமல்ஹாசனின் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும் போது இத்திரைப்படம் ஆக்‌ஷன் படமாக உருவாக இருப்பது தெரியவருகிறது. படத்தின் டைட்டிலை வெளியிட்டிருக்கும் லோகேஷ் கனகராஜ், ‘ஆண்டவருக்கு நன்றி’ என்று கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks