truetamilnews.com

தி.மு.க எம்.பி-க்கு தமிழ் சரியாக எழுத, படிக்கத் தெரியாது என்று செய்தி வெளியிட்ட நாளிதழை செந்தில்குமார் எம்.பி கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி நாடாளுமன்ற தி.மு.க எம்.பி செந்தில்குமார் மிகவும் ஆக்டிவான நபர்.

ஆமா உண்மை தான் 
ஒன்று இரண்டு 
எழுத்து பிழை வரும்.

தினமலர் னு 
எழுதும் பொழுது 
தினமலம் னு 
பிழை வந்துட வாய்ப்பு இருக்கு.

இது நாட்டுக்கு இப்போ ரொம்ப முக்கியம்.

இதெல்லாம் ஒரு செய்தி என்று எழுதி என்ன சாதிக்க விருப்பம்.

களத்தில் மட்டுமல்ல சமூக ஊடகங்களிலும் ஆக்டிவாக உள்ளார்.

தன்னுடைய பணிகள் பற்றி தினமும் பதிவிட்டு வருகிறார். உதவி தேவைப்படுபவர்களுக்கு சமூக ஊடகங்களில் தேடிச் சென்று உதவி செய்து வருகிறார். அவருடைய பதிவுகளில் சில எழுத்துப்பிழைகள் இருப்பது வழக்கம். அது பெரிய தவறாக எடுத்துக்கொள்ள முடியாது. அடுத்த நிகழ்வுக்கு செல்வதற்கு முன்பு அவசர அவசரமாக நானே பதிவிட்டு செல்வதால் சில தவறுகள் நடப்பது இயல்பானது என்று அவரே ஒரு முறை விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிலையில் செந்தில்குமார் எம்.பி-க்கு தமிழ் சரியாக படிக்க, எழுத தெரியாது என்று நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதில் அவருடைய பேட்டியும் வெளியிட்டிருந்தது. ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை தமிழ்

படித்ததாகவும் அதன் பிறகு ஃபிரெஞ்சு, ஆங்கிலம் படித்ததாகவும் அதில் கூறியுள்ளார். இந்தி படிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். தொடக்கக் கல்வி முதல் மருத்துவம் வரை ஆங்கில வழியில் பயின்றதால் தமிழை முழுமையாக பிழையின்றி எழுதத் தெரியாது” என்று அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், அவரை விமர்சிக்கும் வகையில் அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
இதற்கு செந்தில்குமார் தன்னுடைய ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதல், “ஆமா உண்மை தான். ஒன்று இரண்டு எழுத்து பிழை வரும். தினமலர் னு எழுதும் பொழுது தினமலம் னு பிழை வந்துட வாய்ப்பு இருக்கு. இது நாட்டுக்கு இப்போ ரொம்ப முக்கியம். இதெல்லாம் ஒரு செய்தி என்று எழுதி என்ன சாதிக்க விருப்பம்” என்று கேட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks