கொரோனா: எஸ்.பி. பாலசுப்பிரமணியன் உடல்நிலையில் முன்னேற்றம்- அச்சப்படும் நிலை இல்லை: எஸ்.பி.பி. சரண் விளக்கம் சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அச்சப்படும் நிலை இல்லை எனவும் அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.

SP Balasubramaniams Condition Stable, Says Son SPB Saran

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெள்ளிக்கிழமை மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் எஸ்.பி.பி. நலமுடன் குணமடைய வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.

இதனிடையே எஸ்.பி.பி. மகன் எஸ்.பி.பி சரண் ஒரு பதிவில், தமது தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; அச்சப்படும் வகையில் உடல்நிலை இல்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks