truetamilnews.com

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய முதல் போட்டியை செப்டம்பர் 19 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விளையாட உள்ளது.

ஐபிஎல் 2020 தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய மூன்று இடங்களில் நடைபெறுகிறது. 

துபாயில் 24 போட்டிகளும், அபுதாபியில் 20 போட்டிகளும், ஷார்ஜாவில் 12 போட்டிகளும் நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக சென்னை அணி வீரர் இம்ரான் தாஹிர் துபாய் சென்றுள்ளார். 

இதுகுறித்து அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “என் இனிய தமிழ் மக்களே, தஞ்சமடைந்தேன் அன்பு இல்லத்தில் (துபாய்). போட்டிகள் துவங்க ஒரு வாரம் இருக்கும் இந்த தருவாயில் நாங்கள் (சிஎஸ்கே), வேட்டைக்கு தயார். நீங்கள் ஆட்டயை காண தயாரா? எடுட வண்டிய போடுடா விசில” என்று பதிவிட்டுள்ளார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய முதல் போட்டியை செப்டம்பர் 19 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விளையாட உள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks