truetamilnews.com

வங்கி சேவை டிஜிட்டல் மயமாக ஆனதும் போனதும் தற்போது தான் வங்கி மோசடிகள் அதிகரித்துள்ளன. எவ்வளவுக்கு எவ்வளவு வங்கி நடைமுறைகள் எளிதானதோ அதே அளவுக்கு மோசடிகளும் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், உங்கள் கணக்கில் இவ்வளவு பணம் வரவு வைக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு போலி மெசேஜ்கள் நமது செல்போனுக்கு வந்துகொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு ‘உங்கள் வங்கிக் கணக்கில் ரூ. 10,000 கிரெடிட் ஆகியுள்ளது’ என்ற மெசேஜ் வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த குறுஞ்செய்தி தவறானது எஸ்.பி.ஐ வங்கியின் தலைமை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அவ்வாறு வரும் குறுஞ்செய்திகள் போலியானவை என்றும் ஏமாற்று வேலை என்றும் அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி இதுபோன்ற குறுஞ்செய்திகள் ஆங்கிலத்தில் மட்டுமே வரும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks