truetamilnews.com

அர்ஜுன் நடிப்பில் 1993 ஆம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் படத்தின் 2 ஆம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, குறிப்பாக 1980-களின் பிற்பகுதியிலும் 1990-களின் முற்பகுதியிலும் பிறந்தவர்களுக்கு கே.டி.குஞ்சுமோனை நன்றாக தெரியும். ஏனெனில் அவர் பல பாக்ஸ் ஆபிஸ் பிளாக்பஸ்டர் படங்களை தயாரித்தவர். மலையாள படங்களில் இணை தயாரிப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், படிப்படியாக தமிழ் சினிமாவில் தயாரிப்பில் நுழைந்து 1992 ஆம் ஆண்டில் தனது ஏ.ஆர்.எஸ்.ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் சரத்குமார் நடிப்பில் உருவான சூரியன் படத்தை தயாரித்தார். இது சரத்குமாரின் அதிரடி நட்சத்திர அந்தஸ்தை மேலும் உச்சத்திற்கு உயர்த்தியது.

சூரியன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 1993 ஆம் ஆண்டில் இயக்குனர் ஷங்கருடன் ஜென்டில்மேன் படத்திற்காக இணைந்தார். இதில் அர்ஜுன், மதுபாலா கவுண்டமணி ஆகியோர் நடித்தனர். படத்தின் வெற்றி இயக்குநர் ஷங்கர் மற்றும் , தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனை ஒரே இரவில் நட்சத்திரமாக்கியது.

1994 ஆம் ஆண்டில் அதிரடி ரொமாண்டிக் திரில்லர் ‘காதலன்’ படத்துக்காக மீண்டும் கே.டி.குஞ்சுமோன் ஷங்கருடன் இணைந்தார். அப்போதிருந்து, அவர் தமிழில் இன்னும் சில குறிப்பிடத்தக்க படங்களை தயாரித்தார். அக்கினேனி நாகார்ஜுனா மற்றும் சுஷ்மிதா சென் நடித்த ரட்சகன், காதல் தேசம் மற்றும் விஜய்யுடன் நிலவே வா, என்றென்றும் காதல் உள்ளிட்ட படங்களும் இதில் அடங்கும்.

இப்போது, கே. டி.குஞ்சுமோன் தனது 1993 மெகா பிளாக்பஸ்டர் ஜென்டில்மேன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக ஜென்டில்மேன் 2 உடன் மீண்டும் திரைப்படத் தயாரிப்புக்கு திரும்புவதாக அறிவித்துள்ளார். ஜென்டில்மேன் பிலிம் இன்டர்நேஷனல் என்ற அவரது புதிய நிறுவனத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஜென்டில்மேன் 2 படம் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் தயாரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks