truetamilnews.com

தபால் அலுவலகம் வழியாக இந்திய தபால் துறை பல்வேறு நிதிச் சேவைகளையும், முதலீட்டு வாய்ப்புகளையும் மக்களுக்கு வழங்கி வருகிறது. இதில், கிசான் விகாஸ் பத்திரம் மிகப் பிரபலமான முதலீட்டுத் திட்டம் ஆகும். இத்திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகை 124 மாதங்களில் இரண்டு மடங்காக உயர்ந்துவிடும். விவசாயிகள் லாபம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மற்றவர்களும் இந்த திட்டத்தில் சேர்ந்து முதலீடு செய்யலாம். கிராமப்புறங்களில் இத்திட்டத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

இந்த திட்டத்தில் வட்டியை பொறுத்தவரை, 2020-21ஆம் வருடத்தில் 6.9% வட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரட்டிப்பான வருமானம் கிடைப்பது உறுதி என்பதால் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது.

இந்த திட்டத்தில் யாரெல்லாம் முதலீடு செய்யலாம்?

இந்திய குடிமக்கள்.

18 வயதுக்கு மேற்பட்டோர்.

18 வயதுக்கு கீழானவர்கள் பெயரில் பெற்றோர் முதலீடு செய்யலாம்.

அறக்கட்டளைகளும் முதலீடு செய்யலாம்.

மெச்சூரிட்டி சமயத்தில் அசல் தொகை மற்றும் வட்டி உட்பட அனைத்து தொகையும் வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks