தோல் வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சினை, ஆண்மை குறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது தொட்டடா சிணுங்கி(தொட்டாற் சிணுங்கி).

 உடல் சூடு அதிகமானால் சிறுநீர்த் தாரையில் எரிச்சல் ஏற்படும். இதற்கு இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் அளவு எடுத்து தயிரில் கலந்து சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

கை, கால் மூட்டு வீக்கம், ஒவ்வாமை, தோல் தடிப்பு குணமாக, தொட்டா சிணுங்கி இலையை அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.

தொட்டா சிணுங்கி இலையை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்று கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியாகும். வயிற்று புண் ஆறும்.

தொட்டா சிணுங்கி வேரையும், இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து பசும்பாலில் கலந்து குடிக்க மூலச்சூடு குறையும்.

வயிற்று கடுப்பு தீர தொட்டா சிணுங்கி இலையை ஒரு கையளவு எடுத்து நன்றாக அரைத்து ஒரு குவளை தயிரில் கலந்து காலை உணவிற்கு முன் சாப்பிட வேண்டும்.

தொட்டா சிணுங்கி இலைச்சாற்றை தேமல் மேல் பூசிவர தேமல் குறையும். இந்த இலைச்சாற்றை பஞ்சில் தோய்த்து ஆறாத இரணங்களின் மீது தடவி வர ஆறும்.

தொட்டா சிணுங்கி இலை, வேர் இரண்டையும் காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க சர்க்கரை நோய் குறையும்.

ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் 15கிராம் கலந்து சாப்பிட வேண்டும்.  தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட ஆண்மை பெருகும்.

மாதவிடாயின்போது ஏற்படும் அதிகமான இரத்தப்போக்கை கட்டுப்படுத்த முழுச்செடியையும் இடித்து சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டி சாற்றுடன் தேன் கலந்து மூன்று வேளையும் குடிக்க வேண்டும்.  அல்லது ஒரு கைப்பிடி அளவு இலைகளுடன் சிறிதளவு சீரகம் வெங்காயத்தைச் சேர்த்து அரைத்து எலுமிச்சையளவு சாப்பிட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks