truetamilnews.com

இந்தி தெரியாது போடா என்ற ஹெஷ்டேக் இணையத்தில் வைரலானது. இதுமட்டுமல்லாமல், பலர் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

டி சர்ட்டில் எழுதினால் மட்டும் தமிழ் வளராது என பாஜகவை சேர்ந்த வானதி ஸ்ரீநிவாசன் பேசியுள்ளார்.
சமீப காலமாக இந்தி திணிப்பு சர்ச்சை எழுந்துவருகிறது. தி.மு.க. எம்.பி கனிமொழியிடம் சென்னை விமான நிலையத்தில் இருந்த சிஐஎஸ்எஃப் அதிகாரி “இந்தி தெரியவில்லையா? நீங்கள் ஒரு இந்தியரா?” என்று கேள்வி எழுப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதே போல, ஆயுஷ் அமைச்சக கூட்டத்தில், இந்தி தெரியாத மருத்துவர்கள் வெளியேறலாம் என ஆயுஷ் செயலாளர் பேசிய விவகாரம் மக்கள் மத்தியில் பூதாகரமாக கிளம்பியது. அதனை அடுத்து, பலர் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் எழுப்பத்தொடங்கிவிட்டனர்.

இது ஒரு புறம் இருக்க, சமீபத்தில் இயக்குநர் வெற்றி மாறன் அளித்த பேட்டி ஒன்றில், இந்தி தெரியாததால் டெல்லி விமான நிலையத்தில் அதிகாரி ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டதாக கூறியிருந்தார். இந்த நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் நடிகர் சிரிஷ், ‘இந்தி தெரியாது போடா’ மற்றும் ‘தமிழ் பேசும் இந்தியன்’என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட் அணிந்துள்ள புகைப்படத்தை தனது இணையப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.  இதனை அடுத்து, இந்தி தெரியாது போடா என்ற ஹெஷ்டேக் இணையத்தில் வைரலானது. இதுமட்டுமல்லாமல், பலர் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜகவை சேர்ந்த வானதி ஸ்ரீநிவாசன், “டி-சர்ட் மூலம் தமிழை ஒருபோதும் வளர்த்தெடுக்க முடியாது. தமிழை வளர்ப்பதாக சொல்லிக்கொண்டு இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள், 5ம் வகுப்பு வரை கட்டாயமாக தமிழகத்தில் தாய்மொழியில் தான் சொல்லிக்கொடுக்கவேண்டும் என்று சொன்னால் அதை நாங்கள் வரவேற்கின்றோம். ஏன் தமிழை ஒடுக்குகிறீர்கள்? உண்மையாகவே பள்ளிக்கூடத்தில் தமிழை சொல்லிக்கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.” என்று கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks