truetamilnews.com

தமிழ் பேசும் இந்தியன் என்று குறிப்பிடப்பட்ட டி-சர்ட்டை அணிந்து பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
சமீப காலமாக இந்தி திணிப்பு சர்ச்சை எழுந்துவருகிறது.

தி.மு.க. எம்.பி கனிமொழியிடம் சென்னை விமான நிலையத்தில் இருந்த சிஐஎஸ்எஃப் அதிகாரி “இந்தி தெரியவில்லையா? நீங்கள் ஒரு இந்தியரா?” என்று கேள்வி எழுப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதே போல, ஆயுஷ் அமைச்சக கூட்டத்தில், இந்தி தெரியாத மருத்துவர்கள் வெளியேறலாம் என ஆயுஷ் செயலாளர் பேசிய விவகாரம் மக்கள் மத்தியில் பூதாகரமாக கிளாம்பியது. அதனை அடுத்து, பலர் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் எழுப்பத்தொடங்கிவிட்டனர்.

இது ஒரு புறம் இருக்க, சமீபத்தில் வெற்றி மாறன் அளித்த பேட்டி ஒன்றில், இந்தி தெரியாததால் டெல்லி விமான நிலையத்தில் அதிகாரி ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டதாக கூறியிருந்தார். இந்த நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தில், ஐ ஏம் அ தமிழ் பேசும் இந்தியன் என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜாவிற்கு அருகில், இருக்கும் நடிகர் சிரீஷ், இந்தி தெரியாது போடா என்ற வாசகம் அச்சிடப்பட்ட டி-சர்ட்டை அணிந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் பதிவிற்கு திமுக எம்.பி கனிமொழி பாராட்டு தெரிவித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுமட்டுமல்லாமல், நடிகர் ஷாந்தனு மற்றும் அவரது மனைவி கீர்த்தி, ‘ஐ ஏம் அ தமிழ் பேசும் இந்தியன்’ மற்றும் ‘இந்தி தெரியாது போடா’ என்று அச்சிடப்பட்ட டி-சர்ட்டை அணிந்து புகைப்படங்கள் எடுத்து அதனை தங்களது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks