truetamilnews

மே மாதம் முதல் அரசு பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்து வருவதால் ஏராளமானோருக்கு வேலை கிடைக்கத் தொடங்கியதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு இன்மை விகிதம் ஆகஸ்டில் 2.6 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் வேலைவாய்ப்பு அளிப்பதில் நாட்டில் தமிழகம் 4-வது இடத்தில் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் மாதாந்திர ஆய்வறிக்கையில் இந்தியாவில் வேலைவாய்ப்பு இன்மை சதவிகிதத்தை பூஜ்ஜியம் புள்ளி ஐந்து சதவீதமாக குறைத்து நாட்டில் முதலிடத்தில் கர்நாடகா உள்ளது.
ஒடிஷா இரண்டாமிடத்திலும், குஜராத் மூன்றாமிடத்திலும், தமிழகம் 2.6 சதவீதத்துடன் நான்காமிடத்திலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் 49 . 8 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பு இன்மை விகிதம் படிப்படியாக குறைந்திருப்பதும் தெரியவந்துள்ளது

மே மாதத்தில் வேலை வாய்ப்பு இன்மை சதவீதம் 33 சதவீதமாகவும், ஜூனில் 13 .5 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
இதுபோல் ஜூலை மாதத்தில் 8.1 சதவீதமாகவும், ஆகஸ்டில் 2.6 சதவீதமாகவும் வேலைவாய்ப்பு இன்மை விகிதம் குறைந்திருப்பது ஆறுதலை தருவதாக அமைந்துள்ளது.

மே மாதம் முதல் அரசு பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்து வருவதால் ஏராளமானோருக்கு வேலை கிடைக்கத் தொடங்கியதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

திருப்பூர், கோவை மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு நிறுவனங்கள் ஏராளமானோருக்கு மீண்டும் வேலைவாய்ப்பை வழங்கத் தொடங்கிவிட்டதும் வேலைவாய்ப்பு இன்மை விகிதம் குறைந்ததற்கு முக்கிய காரணம் என்றும் தெரியவந்துள்ளது.

முக்கியமாக. ஆகஸ்டில் இ-பாஸ் தளர்வு அறிவிக்கப்பட்டபோது, ஏராளமானோர் மாவட்ட மாநில எல்லைகளை கடந்து சென்றபோது வேலை கிடைத்ததால் வேலைவாய்ப்பு இன்மை சதவிகிதம் குறைந்ததாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பின்மை ஆகஸ்ட்

கர்நாடகா 0.5%
ஒடிஷா 1.4%
குஜராத் 1.9%
தமிழகம் 2.6%

மாதம் வேலைவாய்ப்பின்மை விகிதம்


ஏப்ரல் 49.8%
மே 33%
ஜூன் 13.5%
ஜூலை 8.1%
ஆகஸ்ட் 2.6%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks