truetamilnews

கொரோனா காலத்தில் மக்களுக்கு நம்பிக்கை அளித்தது சித்த வைத்தியம் மட்டுமே. எனவே, சித்த வைத்தியத்துக்கு தனித் துறை அமைத்து சென்னையில் தலைமை அலுவலகம் தேவை என்று ராமதாஸ் குரல் எழுப்பியிருக்கிறார்.


மத்திய ஆயுஷ் அமைச்சகத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்த சித்த மருத்துவ இணை ஆலோசகர் பதவியை கலைத்தது ஏன்? என்று மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் வினா எழுப்பியுள்ளது. தமிழர்களின் மருத்துவ முறையான சித்த மருத்துவ முறைக்கு உள்ள முக்கியத்துவத்தைக் குறைக்க மத்திய ஆயுஷ் அமைச்சகம் முயன்று வரும் நிலையில், உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள இந்த வினா எச்சரிக்கை மணியாகும்.


சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, இந்த வினாவை எழுப்பிய நீதிபதிகள், சித்த மருந்துவ இணை மருந்துக் கட்டுப்பாட்டாளர் பதவிக்கு சித்த மருத்துவம் படித்த, தகுதியானவர்கள் ஏராளமானோர் இருக்கும் போது, ஆயுர்வேதம் படித்த ஒருவரை நியமித்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள இந்த வினாக்கள் அனைத்தும் மிகவும் நியாயமானவை. தமிழர்களின் மருத்துவ முறையான சித்த மருத்துவம் மத்திய அரசால் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறது? சித்த மருத்துவர்களுக்கு தகுதியும், திறமையும் இருந்தாலும் அவர்கள் எவ்வாறு ஓரங்கட்டப்படுகிறார்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்ள இது வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks