truetamilnews

பிரபல பாடகர் எஸ்.பி.பி. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை குறித்து எம்.ஜி.எம் மருத்துவமனையும், அவரது மகனுமான எஸ்.பி.பி. சரண் தினமும் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு வருகிறார்.


கடந்த இரு தினங்களுக்கு முன் எஸ் பி பி யின் உடல் நிலை நன்றாக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம்வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது.அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையை ஏற்கும் அளவுக்கு அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. அவருக்கு தற்போது பிசியோதெரபி கொடுக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் அந்த அறிக்கையில் தெரிவித்தது.

இந்நிலையில், எஸ் பி பி யின் உடல் நிலை குறித்து எம்ஜிஎம் மருத்துவமனை சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும், பேசுவதை புரிந்துகொள்ளும் அளவிற்கு அவர் சுயநினைவுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks