Truetamilnews

தமிழகத்தில் அரசு மக்களுக்கு பெருபாலான திட்டங்கள் செயல்படுத்தி வந்தாலும், மக்களுக்கு சென்று சேர நிறைய தடைகள் உள்ளன. அந்தவகையில் நியாயவிலைக்கடைகளில் பலருக்கும் தெரிந்தே பல அநியாயங்கள் நடக்கின்றன.

ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் பொருளாதார அடிப்படையில் மிகவும் பாதிப்பை சந்தித்துள்ளனர். அரசு விலையில்லா உணவு தயாரிப்பு பொருட்களை நியாய விலை கடைகள் மூலம் விநியோகம் செய்தது.

ஆனால் கடை ஊழியர்கள் மளிகை பொருட்களை கட்டாயம் வாங்கியே ஆகவேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். வாங்காதவர்களுக்கு அரசால் வழங்கப்படும் அரிசி,சர்க்கரை போன்ற பொருட்கள் தர மறுக்கின்றனர். வேலை வாய்ப்பும் இல்லாமல் கையில் பணமும் இல்லாமல் தவிக்கும் மக்கள் ஏதோ இவ்வளவு நாள் அரசின் விலையில்லா பொருட்கள் உதவின. ஆனால் இப்போது பணம் கொடுத்து வாங்கும் சூழலில் மேலும் மளிகை பொருட்களை வாங்கியே ஆக வேண்டும் என்று சொல்வது மக்களுக்கு பிரச்சனையாக உள்ளது.

இதை அரசு கவனத்தில் கொண்டு மக்களின் சுமையை குறைக்க வேண்டும் என்பது பெருவாரியான மக்களின் கருத்தாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks