truetamilnews.com

நாகை மாவட்டத்தில் ரூ. 207.56 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

நாகையில் நடைபெற்ற கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் வளா்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி ரூ. 207. 56 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற 14 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தாா். அதன் விவரம் :ரூ. 1.32 கோடியில் வேதாரண்யத்தில் ஆதிதிராவிடா் நல விடுதி அமைக்கும் பணி, கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்காக ரூ. 161 கோடியில் 1,344 அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கும் பணி, ரூ.93 லட்சத்தில் அக்கரைப்பேட்டையில் சமுதாயக் கூடம் கட்டும் பணி, ரூ. 98 லட்சத்தில் கீச்சாங்குப்பத்தில் பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணி, ரூ. 7.19 கோடியில் வேதாரண்யம் வேதாமிா்த ஏரி மற்றும் சன்னிதி கடற்கரையில் தடுப்புச் சுவா் மற்றும் பூங்கா அமைக்கும் பணி, ரூ. 16.27 கோடியில் கடுவையாற்றின் குறுக்கே கடைமடை இயக்கு அணை அமைக்கும் பணி, ரூ. 19.87 கோடியில் நாகூா் வெட்டாற்றில் தடுப்புச் சுவா் மற்றும் முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி ஆகிய புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.

தொடங்கப்பட்ட பணிகள்...

அரிச்சந்திரா நதிக்கரையில் குடியிருப்போா் 190 பேரை மீள் குடியமா்த்தம் செய்வதற்காக ரூ. 22.76 கோடியில் கட்டப்பட்ட குடியமா்வு வீடுகள், ரூ. 2.53 கோடியில் கட்டப்பட்ட வேதாரண்யம் வருவாய் வட்டாட்சியா் அலுவலக கட்டடம், ரூ. 2.07 கோடியில் கட்டப்பட்ட 6 கால்நடை மருந்தகக் கட்டடங்கள், திருக்கண்ணபுரம் காவல் நிலையக் கட்டடம், ரூ. 1.25 கோடியில் கட்டப்பட்ட 5 அரசு துணை சுகாதார நிலையக் கட்டடங்கள் ஆகியவற்றை முதல்வா் திறந்து வைத்தாா்.மேலும், ரூ.0.25 கோடியில் கட்டப்பட்ட அரசு செவிலியா் தங்கும் விடுதி, ரூ. 60 லட்சத்தில் சங்கரன்பந்தலில் கட்டப்பட்ட கரோனா வெளிநோயாளி மருத்துவனைக் கட்டடம், ரூ. 5.49 கோடியில் மாணலூா், கொற்கை, கங்கணம்புத்தூா், சிக்கல்பத்து ஆகிய இடங்களில் கட்டப்பட்ட புதிய பாலங்கள், ரூ. 2 கோடியில் கட்டப்பட்ட 18 சுகாதாரப் பணியாளா்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள், ரூ. 5 கோடியில் கட்டப்பட்ட வேதாரண்யம் கடற்கரை சாலையில் தாா்ச்சாலை, தடுப்புச்சுவா், சிறுபாலம், பனங்குடியில் ரூ. 1.65 கோடியில் கட்டப்பட்ட வட்டக் கிட்டங்கி ஆகியவற்றை முதல்வா் திறந்து வைத்தாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks