truetamilnews.com

விருதுநகர் மாவட்டத்தில் சங்கரபாண்டியன்புரம் பகுதியில் குடிநீர் சப்ளை குறைவு வாரம் இரு நாள் வந்த தாமிரபரணி குடிநீர் தற்போது வாரம் ஒரு முறைதான் வருகிறது. இதுவும் சரியான அளவில் சப்ளை இல்லை. வேறு பகுதிகளுக்கு குடங்களை துாக்கி அலைய வேண்டிய நிலை உள்ளது. முருகலட்சுமி, குடும்பத்தலைவி

திறந்த வெளியை நோக்கிதனி நபர் கழிப்பறை அமைக்க இடவசதியின்றி திறந்த வெளியை நாடுகின்றனர். ஆண்கள் கானாக்குளம் கண்மாயை திறந்த வெளியாக பயன்படுத்துகின்றனர் . மழைக்காலங்களில் நீர் பெருகினால் இதற்கும் சிக்கலாகி விடுகிறது. சுப்பிரமணிவிசைத்தறி தொழிலாளி.

சேதமான தண்ணீர் தொட்டிதெற்கு தெரு மேல் நிலை தொட்டி சுற்றுப்பகுதி பராமரிப்பின்றி புதர் மண்டி கழிவு நீர் தேங்கி நிற்கிறது. அனைவரும் துர்நாற்றத்தால் பாதிக்கிறோம். முறையாக சுத்தப்படுத்த வேண்டும். ஜெயமுருகன்விசைத்தறி தொழிலாளி

22 கிராமங்களுக்கு ஒருவரே22 கிராமப்பகுதிகளுக்கு ஒரு துாய்மை பணியாளரே உள்ளனர். மேல் நிலைத்தொட்டி சுற்றிய கழிவுகள் அகற்றப்படும். செல்வ விநாயகர் கோயில் தெருவிற்கு சிமென்ட ரோடு போடப்படும். ராஜகோபால், ஊராட்சி தலைவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks