truetamilnews.com

மத்திய அரசின் விவசாயிகளுக்கான பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு தொடர்பாக 4 பேரை கைது செய்து சிபிசிஐடி நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கான பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி உதவி திட்டத்தில், கள்ளக்குறிச்சி விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் முறைகேடு நடைபெற்று, போலியாக பயனாளிகள் சேர்க்கப்பட்டனர். இது குறித்து வேளாண் துறை மற்றும் வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டு போலி பயனாளிகள் பட்டியலை நீக்கினர்.வேளாண் அலுவலர்கள், ஒப்பந்த ஊழியர்கள் சிலர் முறைகேட்டில் ஈடுபட்டதாக, கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வேலாயுதம், விழுப்புரம் சிபிசிஐடி காவல்துறையினரிடம் புகார் தெரிவித்திருந்தார்.அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி காவல்துறையினர் உளுத்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த கண்ணப்பன், ஏழுமலை, வீரன், மணிமேகலை ஆகிய நான்கு ஒப்பந்த ஊழியர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கெனவே இரண்டு வேளாண் உதவி இயக்குனர்களை பணியிடைநீக்கம் செய்தும், 13 தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கம் செய்தும் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வேலாயுதம் உத்தரவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks