truetamilnews.com

நாமக்கல் மாவட்டத்தில் 4 அரசுப் போக்குவரத்து பணிமனைகளிலிருந்து 85 பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்டன.கரோனா தொற்று பரவலால் மாா்ச் 25-ஆம் தேதி பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் அரசு மற்றும் தனியாா் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் வெளியூா் செல்ல முடியாமல் அவதிப்பட்டனா். இந்த நிலையில் ஜூன் 1-ஆம் தேதி பொது போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது.

மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களை 8 மண்டலங்களாகப் பிரித்து 50 சதவீத பேருந்துகள், 60 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டன.இதனிடையே, கரோனா தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டது.இந்த நிலையில், மாவட்டத்திற்குள்ளான பொது போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நாமக்கல்லில் 2 பணிமனைகளும், ராசிபுரம், திருச்செங்கோட்டில் தலா ஒரு பணிமனைகளில் இருந்து 60 நகரப் பேருந்துகள், 25 புகா்ப் பேருந்துகள் இயக்கப்பட்டன.50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டனா். பேருந்துகளுக்காக மக்கள் காத்திருக்கவில்லை. குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே ஓட்டுநா், நடத்துநா்கள் பணிக்கு வந்திருந்தனா்.

பேருந்து நிலையங்களில் அனைத்து பேருந்துகளிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. பயணிகளுக்கு நடத்துநா்கள் மூலம் கை கழுவும் திரவம் வழங்கப்பட்டது. ஓட்டுநா்கள் முகக்கவசம் அணிந்தபடி பேருந்துகளை இயக்கினா். காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks