truetamilnews.com

சென்னை: சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் இணைந்து வெளிநாட்டு போதை பொருட்களை சென்னையில் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 லட்சம் மதிப்புள்ள கெட்டமைன் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.சேப்பாக்கம் அருணாச்சலம் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 3வது மாடிவில் உள்ள ஒரு வீட்டில் வெளிநாட்டு போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மயிலாப்பூர் துணை கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் இன்ஸ்ெபக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு போதைப்பொருள் விற்பது உறுதி செய்யப்பட்டது.

அங்கிருந்து 10 லட்சம் மதிப்புள்ள 370 கிராம் கெட்டமைன், 87 எல்எஸ்டி ஸ்டாம்பு, 11 கிராம் சரஸ், 11 கிராம் என்டிஎம்ஏ மாத்திரைகள், 2 எடை போடும் இயந்திரம், 3 செல்போன்கள், 2,450 ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.இதுதொடர்பாக சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த முகமது அனீஸ் (30) உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், வெளிநாடுகளில் இருந்து விமான நிலையம் மற்றும் துறைமுகம் மூலம் கடத்தி வரப்பட்ட போதை பொருட்களை கொள்முதல் செய்து, சென்னை முழுவதும் உள்ள கஞ்சா வியாபாரிகள் மூலம் இவர்கள் விற்பனை செய்துள்ளனர். 

மேலும், நட்சத்திர ஓட்டல்கள், பண்ணை வீடுகளில் நடத்தப்படும் மது விருந்தின் போது இந்த போதை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட முகமது அனீஸ்க்கு சர்வதேச போதை பொருள் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதனால், இந்த வழக்கை மாநகர காவல் துறையில் இருந்து தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள் குறித்து தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks