truetamilnews.com

சென்னை:தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நேற்று மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில், பேருந்துகள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யும் பணியினை பார்வையிட்டார். பிறகு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த பேட்டி: தமிழக முதல்வர் உத்தரவின்படி, கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக தடைபடுத்தப்பட்டிருந்த அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் அரசின் வழிக்காட்டுதலின்படி இயக்கப்படுகின்றன.

முதல் நாள் பகல் 1 மணி நிலவரப்படி 6,090 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. பஸ் இருக்கைகள் (60சதவீதம்) புறநகரப் பேருந்துகளில் 32 பயணிகள் மற்றும் நகரப் பேருந்துகளில் 24 பயணிகளுடனும் இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.முதல் நாளான இன்று (நேற்று) பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. 

படிப்படியாக பயணிகளின் எண்ணிக்கை உயரும் போது பேருந்துகளின் எண்ணிக்கையை உயர்த்திடவும், மாவட்ட அளவிலேயே பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் முதல்வர் உத்தவிட்டுள்ளார். அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான 22,000 பேருந்துகளில், இன்று 6,090 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. தேவைக்கு ஏற்ப பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.

மாவட்டத்திற்குள்ளாக பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படுகிறது. பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட எல்லைக்கு அருகாமையில் உள்ள பேருந்து நிறுத்தம் வரையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிதம்பரத்தில் பேருந்துகள் இயக்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாலை தொடங்கி இரவு 9 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

பஸ் கட்டணம் உயர்வில்லை…

பழைய பாஸ் செல்லும்போக்குவரத்து அமைச்சர் மேலும் கூறியதாவது, ”பேருந்து கட்டணம் உயர்வு தொடர்பாக சமூக வலைதளங்களில் செய்தி வருவது முற்றிலும் தவறான தகவல். தற்போது எந்தவிதமான கட்டண உயர்வுமின்றி நடைமுறையில் உள்ள கட்டண அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மார்ச் 2020 மாதத்தில் வழங்கப்பட்ட ₹1000 பயண அட்டையினை, செப்டம்பர் 15ம் தேதி வரையில் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. புதிய மாதாந்திர பயண அட்டையினை நாளை (இன்று) முதல் விற்பனை நிலையங்களில் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை (இன்று) முதல் பெற்று கொள்ளலாம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks